உலகில் 1.8 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிப்பு

உலகம் முழுவதும் 1.8 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பமாகிய கொரோனா  வைரஸ்  தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி 1.8 கோடிக்கும் அதிகமானவர்களைப் பாதித்துள்ளது. 6,87,000 பேர் பலியாகியுள்ளனர். 1கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்று மற்றும் இறப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 48,13,647 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,58,365பேர் பலியாகியுள்ளனர்.

அடுத்து பிரேஸிலில் 27,33,677 பேர் பாதிக்கப்பட்டும், 94,130 பேர் பலியாகியும் உள்ளனர்.

வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து  கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக சமீபத்திய தகவல் வெளியானது.

அத்துடன் ஐக்கிய அமீரகம், பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகள் கரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளன. அனைத்துக் கட்டப் பரிசோதனைகளும் வெற்றிகரமாக முடிந்து விட்டதாகவும், ஓகஸ்ட் மாத்தின் மத்தியில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் ரஸ்யா சமீபத்தில் தெரிவித்தது.