உயிர்ப்பு நாளின் உயிர்ப்பலிகள்… -சுடரவன்-

479 Views

அது 1990, சிறிலங்கா தரப்பிற்கும் தமிழீழ விடுதலப் புலிகளுக்கு மிடையே போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டு, அமைதி நிலவிய காலம். மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் விடுதலைப்புலிகள் அரசியல் பணிமனைகளை அமைத்து தமது அரசியல் பணிகளை முன்னெடுத்து வந்த நேரம். காத்தான்குடி பகுதியில் அமைந்திருந்த அரசியல் பணிகளுக்கு பொறுப்பாக இருந்த போராளியின் (இவர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்) கைத்துப்பாக்கி அங்குவைத்து சிலரால் பறித்துச் செல்லப்பட்டதாக செய்தி கிடைக்கிறது. இந்த சம்பவம் பற்றி ஆராய்ந்த விடுதலைப்புலிகள் அன்றிரவே காத்தான்குடியின் குறிப்பிட்ட பகுதிகளை சுற்றிவளைத்து தேடுதல் ஒன்றை மேற்கொள்கின்றனர்.ready உயிர்ப்பு நாளின் உயிர்ப்பலிகள்... -சுடரவன்-

இந்த சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு இடம்பெறுகிறது. சுட்டவர்களை துரத்திச் சென்ற விடுதலைப்புலிகள் அவர்களில் ஒருவரை AKMS ரக தானியங்கி சுரிகுழல் துப்பாக்கியுடன் கைது செய்கின்றனர். குறித்தநபர் மூதூர் பகுதியில் இயங்கி வரும் ஜிகாத் அமைப்பைச் சேந்தவர் என்றும் பயிற்சியளிப்பதற்காகவே அவர் காத்தான்குடிக்கு வந்திருந்ததாகவும் தெரிய வந்தது. தொடர்ந்து நடைபெற்ற தேடுதலில் பலர் கைதாகினர். இதில் இஸ்லாமிய மதபோதகர்களும் அடக்கம்.

குறித்த ஒரு வீட்டைச் சோதனையிட்ட போது அங்கிருந்து .22 வகை சுரிகுழல் துப்பாக்கி பன்புல் கட்டுகளுக்கு இடையே மறைக் கப்பட்டிருந்த நிலையில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. அத்துடன் முஸ்லீம் ஜிகாத் அமைப்பின் பல ஆவணங்களும் அங்கு கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்கள் அரபு மொழியில் எழுதப்பட்ட வையாக இருந்ததுடன், சில இடங்களில் சங்கேதக் குறியீடுகளும் காணப்பட்டன. பின்னர் அந்த ஆவணங்கள் ஆராயப்பட்ட போது இந்த ஆயுத அமைப்பிற்கு காத்தான்குடியில் பயிற்கிகள் வழங்கப்படுவது, ஆயுதங்கள் பெறப்பட்ட வழிகள்> நிதி நடவடிக்கைகள் போன்ற விபரங்கள் தெரியவந்தன.

அதில் இவ்வமைப்பிற்கு பின்புலமாக இருந்து உதவுவோர் பற்றி குறிப்பிட்ட பகுதியில் சங்கேத மொழியில் ‘அமைச்சர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பெயர் குறிப்பிடப்படவில்லை ஆயினும் அது அப்போதைய முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் எம். எச் எம் அஷ்ரஃப் அவர்களையே குறிப்பதாக நம்பப்பட்டது. (அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் புகழ் பெற்ற கல்வியாளரான கலாநிதி அமீர் அலி அவர்கள் அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் முஸ்லீம் காங்கிரஸே இல்லாமிய தீவிரவாதத்தின் தோற்றுவாய் எனக் குறிப்பிட்டிருந்தது இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.)

இச்சம்பவத்தை அடுத்து காத்தன்குடி இஸ்லாமிய மதத்தலைவர்கள், சமூகப்பெரியார்கள், விடுதலைப் புலிகளுடன் நேரடியாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இனி தாம் இவர்களின் நடவடிக்கைகளை அங்கு அனுமதிக்கப் போவதில்லை என்றும், சமூகங்களுக் கிடையேயான நல்லிணக்கம் கருதி அனைவரையும் விடுதலை செய்யுமாறும் கேட்டுக்கொண்டனர். இதன் அடிப்படையில் விடுதலைப்புலிகளால் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கையில் குறிப்பாக, கிழக்கில் இத்தகைய இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களின் தோற்றத்தை ஆரம்பத்திலிருந்தே சிறிலங்கா இனவாத அரசுகள் நன்கறிந்திருந்தது மட்டுமன்றி, அவற்றை ஊட்டி வளர்த்து தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தியும் வந்ததே வரலாற்று உண்மை.

கிழக்கில் முஸ்லீம் ஊர்க்காவல் படையினர் என்ற பெயரில் சிறிலங்கா படைத்துறையால் உள்வாங்கப்பபட்ட அநேகர் இந்த இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளில் அங்கம் வகித்தவர்களே. சிறிலங்கா படையினருடன் இணைந்து இவர்கள் கிழக்கில் மேற்ற கொண்ட தமிழினப் படுகொலைகள் அநேகம். தமிழர்கள் தமது பூரவீக வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டன. வழிபாட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இன்று தமிழர்களின் பூர்வீக கிராமங்கள் பல முற்றாக முஸ்லீம் கிராமங்களாக மாற்றம் பெற்றுள்ளன.

இவையனைத்தும் சிறிலங்கா பேரினவாத அரசுகளின் முழு ஆசிர்வாதத்துடன், முஸ்லீம் அரசியல் வாதிகளின் வழிகாட்டலில் இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களினால் அரங்கேற்றப்பட்டன.

இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி இன்று உரத்துக்க கூச்சலிடும் எந்த அரசியல்வாதியும் அன்று திராய்க்கேணி கிராமம் அழிக்கப்பட்டபோது, வீரமுனையில் தமிழர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட போது, மல்வத்தையில் தமிழ் பெண்கள் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டபோது வாய்திறக்கவில்லை. இன்று அறிக்கைமேல் அறிக்கைவிடும் ஆண்டகைகளுக்கும் அந்த மக்களின் அழுகுரல் கேட்கவேயில்லை.ready 2 உயிர்ப்பு நாளின் உயிர்ப்பலிகள்... -சுடரவன்-

1990களில் ஜிகாத் என்ற ஒரே இஸ்லாமிய தீவிரவாதக் குழுவே இயங்கிவந்த போதும் பின்னாளில் பல்வேறு குழுக்கள் உருவாக்கம் பெற்றன. இந்த ஜிகாத் குழு சிறிலங்கா அரசபடைகளின் துணை இராணுவக் குழுவாகவே செயற்பட்டுவந்தது. 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள் என நம்பப்படும் தேசிய தவ்ஹீத் அமைப்பின் உறுப்பினர்கள் குறைந்தது 26 பேர், சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் ஊதியம் பெறும் உறுப்பினர்களாக உள்ளமை இலாமிய தீவிரவாதத்திற்கு சிறிலங்கா சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளுக்கும் இடையேயான நெருக்கமான நீண்டகால உறவை வெளிப்படுத்தி நிற்கிறது.

2004 காலகட்டத்தில் இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்து இருந்ததாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்தன. (The Jihad Group, The Al Fatah Group, The Saddam Group, The Osama Group, The Jetty Group, The Knox Group, The Mujahadeen Group and The Islamic Unity Foundation) இத்தகைய குழுக்களின் தோற்றம், செயற்பாடுகள் பற்றி சிறிலங்கா அரசு மட்டுமன்றி அமெரிக்காவும் கூட நன்கறிந்தேயிருந்தது. இது பற்றி இலங்கையில் இருந்த அமெரிக்கத் தூதுவர் வொசிங்டனுக்கு அனுப்பிய இரகசியச் செய்தியை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது. இதில் திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் பல்வேறு இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள் செயற்படுவதாகவும் இதன் பின்னணியில் முஸ்லீம் காங்கிரஸ் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

(CONFIDENTIAL//NOFORN and written on June 09, 2004. The cable is signed by the US Ambassador to Colombo Jeffrey J. Lunstead.

“In the eastern Trincomalee District, Source identified three primary groups : the Knox group (named after a revered Englishman), Ossama group, and Jetty (primarily harbor workers). These groups have the backing of the Sri Lanka Muslim Congress. In the eastern Ampara District, Source identified the Mujahadeen group, comprising 150 armed members, as being stronger even than the Ossama group in Trinco.”)3 உயிர்ப்பு நாளின் உயிர்ப்பலிகள்... -சுடரவன்-

காலம் சென்ற முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் எம். எச் எம் அஷ்ரஃப் வித்திட்ட இந்த இஸ்லாமியத் தீவிரவாதம் காலாகாலமாக முஸ்லீம் அரசியல்வாதிகளால் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு பயன்படுத்தப் பட்டுவருகிறது. சிங்கள பேரினவாத அரசியல்கட்சிகள் தமது ஆட்சிக்கு முட்டுக்கொடுக்க முஸ்லீம் அரசியல் தலைமைகளை நம்பியிருப்பதும்> அதற்கு கைமாறாக அரசியல் உயர்பதவிகளையும்> சலுகைகளையும் வழங்குவது மாத்திரமன்றி இவர்களின் பின்னணியில் உள்ள இந்த இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களின் நடவடிக்கைகையும் கண்டு கொள்ளாமல் இருக்கும் கைங் கரியத்தையும் செய்துவருகின்றன.

‘நானே தமிழர்களின் காணிகளைப் பறித்தேன்> அவர்களின் ஆலயத்தைக் கைப்பற்றி அதனை அழித்து முஸ்லீம்களுக்காக சந்தை யொன்றை அமைத்தேன். நானே முஸ்லீம் இளையோருக்கு ஆயுதங்களை வழங்கினேன்> நீதியாளரின் தீர்ப்பை மாற்றி எழுதவைத்தேன்” என்று மிக வெளிப்படையாகக் கூறும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவினால் இன்றும் கிழக்குமாகாண ஆளுநராக நீடிக்க முடிகிறது. ஊழல்மோசடி> போதைப்பொருள் கடத்தல்> காடுகளை அழித்து காணி பிடித்தமை என குற்றச்சாட்டுகள் அடுக்கப்படும் ரிசாட் பதியுதீன்> அமைச்சர் பதவியில் தொடர முடிகிறது. இவற்றுக்கு மேலாக இந்த இருவர் மீதும் இஸ்லாமிய தீவிரவாதத் தொடர்புகள் பற்றி பல்வேறு தரப்புகளில் இருந்தும் வலுவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற போதும் சிறிலங்கா அரசு ஒப்புக்கு கூட விசாரணை நடத்த முன்வரவில்லை.Kattankudy weapons உயிர்ப்பு நாளின் உயிர்ப்பலிகள்... -சுடரவன்-

உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பலரும் பல்வேறு தரப்புகளை நோக்கி விரல்களை நீட்டுகின்றனர். உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் செயல் என்கின்றனர் சிலர். இல்லையில்லை இதன் பின்னணியில் இருப்பது அமெரிக்கா என்கின்றனர் சிலர். இந்தியாவாகக்கூட இருக்கலாம் என்கின்றனர் வேறுசிலர். எது எப்படி இருந்தபோதும் இந்த பயங்கரவாத நடவடிக்கையில் நேரடியாக ஈடுபட்டவர்கள் இலங்கை முஸ்லீம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களே. இவர்களின் உருவாக்கத்திலும் வளர்ப்பிலும் பிரதான பங்குவகித்தது சிறிலங்கா பேரினவாத அரசே. அத்துடன் இந்த பயங்கரவாதத் தாக்குதலால் கூட நன்மையடைந்த ஒரு தரப்பு இருக்குமானால் அது சிங்கள பேரினவாதத் தரப்பாக மட்டுமே இருக்கமுடியும். எனவே இங்கு முதன்மைக் குற்றவாளிகள் என்ற வகையியல் முதலில் கண்டிக்க வேண்டியதும் தண்டிக்க வேண்டியதும் சிறிலங்கா சிங்களப் பேரினவாதிகளையே.

Leave a Reply