இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக போராடிய பாலஸ்தீனர்கள் கைது

138 Views

இஸ்ரேலியப் படையினர் பாலஸ்தீனத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்ட போது, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்ரேலியப் பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனர்களை கைது செய்யவுள்ளதாக இஸ்ரேலிய அரசு அறிவித்துள்ளது.

மேலும் கடந்த மே 9ம் திகதி வரை 1550 பாலஸ்தீனர்களை கைது செய்துள்ளதாகவும், இந்த கைது நடவடிக்கை தொடரும் எனவும் அந்நாடு அறிவித்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள இஸ்ரேல், நகரங்களில் கடந்த இரண்டு வாரமாக போராடிய போராட்டக்காரர்களை கைது செய்யவுள்ளதாக கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேலில் அரபு சிறுபான்மையினருக்கான சட்ட உரிமைகள் அமைப்பின் தலைவர் ஹாசன் ஜாபரின்“ இந்த நடவடிக்கை பாலஸ்தீன போராட்டக்காரர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது இஸ்ரேல் நடத்தும் போர்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply