இலங்கை முஸ்லிம்களின் உடல்களை தமது நாட்டில் அடக்கம் செய்யும் முடிவை கைவிட்ட மாலைதீவு

438 Views

இலங்கையில் கொரோனா காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை தமது நாட்டில் அடக்கம் செய்யும் திட்டத்தை மாலைதீவு அரசாங்கம் கைவிட்டுள்ளதாக இலங்கையிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் கொழும்பு மற்றும் மாலைதீவு நாடுகள் எந்தவொரு காரணத்தையும் தெரிவிக்காமல் இந்த நடவடிக்கையை கைவிட்டன என்றும் அந்த ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவைக் கருத்தில் கொண்டு இலங்கையில் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கு ஒப்புக் கொள்வதாக மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் சோலிக் கடந்த வாரம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply