றுவாண்டாவில் 1994 ஆம் ஆண்டு 800,000 மக்கள் படுகொலை செய்யப்பட்ட பிரதேசங்களை ஐக்கிய நாடுகள் சபையின் பண்பாட்டு மற்றும் கலாச்சார பிரிவு தொல்லியல் இடங்களாக கடந்த புதன்கிழமை (20) பிரகடனப்படுத்தியுள்ளது.
மனிதர்கள் துன்பங்களை அனுபவித்த இடமாக முறம்பி, கிசோசி மற்றும் பிசசேரோ ஆகிய பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ருற்ஸி இனத்தை சேர்ந்த மக்கள் அங்கு பெருமளவில் குடு ஆயுதப்படையினரால் படுகொலை செய்யபட்டிருந்தனர்.
ஐ.நாவின் இந்த நடவடிக்கை இனப்படுகொலையில் மரணித்தவர்களை நினைவுகூர்வதற்கும், எதிர்காலத்தில் இவ்வாறான இனப்படுகொலைகள் நிகழாது தடுப்பதற்றகும் உதவும் என றுவாண்டா அரசின் பேச்சாளர் ஜெலன்டா மகோலோ தெரிவித்தள்ளார்.
அதேசமயம் பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் உள்ள முதலாவது உலகப்போர் நினைவாலையங்கள் மற்றும் ஆர்ஜன்ரீனாவில் உள்ள மக்களை துன்புறுத்திய பிரதேசம் என்பனவும் உலகின் தொல்லியல் இடங்களாக ஐ.நா பிரகடனப்படுத்தியுள்ளது.