புவியியல் அச்சரத்தின்படி அண்டை நாடு உனது எதிரி என்ற வகையில் இலங்கையின் அண்டை நாடு இந்தியா, இலங்கைக்கு நிரந்தர எதிரி. அந்த அண்டை நாட்டின் அண்டை நாடு உனது நண்பன் என்ற வகையில் இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியன்மார் (பர்மா) என்பன இலங்கையின் நிரந்தர நண்பர்கள்.
பௌத்தம் பிறந்த நாடு இந்தியா; அந்த இந்தியாவில் இருந்துதான் இலங்கைக்கு பௌத் தம் பரவியதானாலும் அந்த பௌத்தங்கூட இந்தி யப் பேரரச ஆதிக்கத்தின் வெளிப்பாடாகவே அண்டை நாடான இலங்கைக்கு கி.மு மூன்றாம் நூற்றாண்டில் பரவியது.
பௌத்தம் பிறந்த இந்துமத இந்தியாவில் வடக்கிலும் தெற்கிலும் இந்துமதப் பிரிவுகளான சைவ – வைஷ்ணவ பிரிவுகளால் பௌத்தம் முற் றாக அழிக்கப்பட்டுவிட்டது. மேலும், ஈழத் தமிழர்கள் பரந்த இந்தியாவின் இந்து மதத்தையும் தமிழகத்தில் நிலவும் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் கொண்டவர்களாக இருக்கும் நிலையில் சிறிய பாக்குநீரிணையைக் கடந்து இந்திய ஆதிக்கமும் செல்வாக்கும் இலங்கைக்கு இலகுவாகப் பரவி சிங்கள பௌத்தத்தை காவு கொண்டுவிடும் என்கின்ற அச்சம் சிங்கள பௌத்தர் களிடம் இயல்பாகவே உண்டு.
2500 ஆண்டு காலத்துக்குக் குறையாத மத, பண்பாட்டு, அரசியல், இராணுவ, வரலாற்று அனுபவங்களும் இதற்கு உடந்தையாக உள்ளன என்பதில் சந்தேகம் இல்லை. புவியியல் – அரசியல் – வரலாற்று அர்த்தத்தில் இலங்கைத் தீவு இந்தியாவின் நீட்சியேயாகும்.
“ Sri Lanka is divided into two geographic zones. The southwest of the island is Sri Lanka”s core … The northern part of the island is divided into the inlandVanni region and the Jaffna Peninsula on Palk Bay. The north is connected to India by a chain of islands and sandbars known as Adam’s Bridge, which has historically eased the movement of goods and people to and from the mainland.
Sri Lanka”s main geographic challenge is to protect its core around Colombo , while promoting integration with the north. The most recent challenge to Colombo”s dominance was from the Tamil Tigers insurgent group, who used the Vanni region and Jaffna peninsula regions as bases …” Uniting the north with the core will allow Colombo to take advantage of low – end manufacturing leaving China, using its underdeveloped north as a cheap labour.’
மேற்படி கூறப்படும் கருத்தைக் கவனத் திற்கு எடுத்து இலங்கைத்தீவு — ஈழத் தமிழர் – இந்தியா – சீனா என்பன சார்ந்த புவியியல் கட்ட மைப்புக்குள் வைத்து, இதற்குள் அடங்கக்கூடிய புவியியல் அமைவிடம் சார் மூலோபாயத்தை முதற்கண் மிகவும் கூர்மையாக அணுக வேண்டியது அவசியம்.
அரசியல்-புவியியல் ரீதியாக (Political Geography) இலங்கை இரண்டு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று, கொழும்பை அச்சாகக் கொண்ட தென்மேற்கு மையப்பகுதி. அடுத்து, பாக்குநீரிணையுடன் ஒட்டியவாறு இருக்கின்ற யாழ். குடாநாடு, வன்னியை உள்ளடக்கிய வடபகுதி. இந்த வடபகுதி தீவுத் தொடர்களினாலும் அடம்ஸ் பிரிட்ஜ் (Adam’’s Bridge) எனப்படுகின்ற தொடர் மண்மேடுகளினாலும் இந்தியாவுடன் இணைக் கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கும் வடக்குக்கும் இடையே வரலாற்று ரீதியாக உள்ளும் புறமும் மக்கள் நடமாட்டத்தையும் பண்ட நகர்வுகளையும் இலகுபடுத்தியுள்ளது.
இதன் பின்னணியில் அரசியற் புவிசார்ந்த வகையில், இலங்கையின் முக்கிய சவாலாக இருப்பது கொழும்பைச் சூழ்ந்த அதன் தென்மேற்கு மையப் பகுதியை குறிப்பாக இந்தியாவி டம் இருந்து பாதுகாப்பதும் வடக்கை இந்தியாவி லிருந்து விலக்கி கொழும்பு மையத்துடன் இரண்ட றக் கலக்கச் செய்வதுமாகும்.
இதன் பின்னணியில் ஆசியாவில் முதற்தர அரசியல் இராணுவ பொருளாதார வல்லரசாக வளர்ந்திருக்கும் இந்தியாவின் அண்டை நாடான சீனாவின் மலிவான பொருளாதாரத்தைக் கொழு ம்புக்கூடாக யாழ்ப்பாணத்திற்குப் பரப்புவதன் மூலம் வடக்கை கொழும்புடன் பொருளாதார ரீதியாக இணைத்து, வடக்கை கொழும்பு மையத்துடன் கரைப்பதற்கேற்ற மூலோபாய அனு கூலத்தை இன்றைய நாளில் இலங்கை அரசு முன்னெடுக்கின்றது. இது வல்லரசுகளுடன் இணைந்து கட்டமைக்கப்படும் பொருளாதார இனப்படுகொலைக் கட்டமைப்பாகும்.
நலன்கள்(wellfare) – தேவைகள்(needs) – தர்மம்(dharma) இலங்கைத் தீவானது இந்தியாவுக்கு மிக அருகே, இந்துப் பெருங்கடலின் மையத்தில் வர்த்தக, இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த அமை
விடத்தைக் கொண்டுள்ளதால் சமுத்திரங்களையும் கண்டங்களையும் தாண்டி உலகப்பெரு வல்லரசு களும் இலங்கையில் தத்தம் நலன்களுக்காகக் காலூன்றுகின்றன. குறிப்பாக, மேற்குலக வல்லரசு களின் போட்டி இதில் முக்கியமானது. இதில் பங்கு வகிக்கும் அண்டை நாடான இந்தியாவாகினும் சரி, அண்டை நாட்டின் அண்டை நாடான சீனாவும் சரி, அமெரிக்கா உள்ளிட்ட உலகப் பெரு வல்லரசுகள் ஆயினும் சரி, அனைத்தும் இலங்கைத் தீவையும் இலங்கையின் இனப் பிரச்சினையையும் தத்தம் நலன் சார்ந்த நோக்கு நிலையில் இருந்துதான் அணுகுகின்றன.
நலன்களே தேவை; தேவையே தர்மம். உயிரை உயிர் உண்டு வாழ்வதே உயிர் வாழ்வு என்ற ரீதியில் அனைத்துத் தர்மங்களும் ஆக்கிர மிப்புக்களைப் பொன்முடிகளாய்ச் சூடிக்கொண்ட வைகளே.
ஆதலால், தேவை எதுவோ அதுவே தர்மத்தை வடிவமைக்கிறது. எனவே தர்மம் என்பது தேவை. இந்தவகையில், தேவை தர்மம் என்ற மணிமுடியைச் சூடிக்கொள்கிறது. ஆதலால், உள்ளடக்கத்தில் தேவைதான் தர்மம்; தர்மம்தான் தேவை.
மொத்தத்தில்,
தர்மம் = தேவை;
தேவை = தர்மம்.
இந்தச் சூத்திரத்திற்கு ஊடாகப் புவி சார்-அரசியலையும் (Geopolitics), அரசியல்-புவியிய லையும் (Political geography – Politically formed Geographic region), உலகளாவிய-அரசியல் (Global politics) என்பனவற்றை எல்லாம் காலகட்ட வளர்ச்சிக்கு ஏற்ப ஒருங்குசேரக் கணக்கிலெடுத்து ஈழத் தமிழருக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையைப் பெரிதும் விஞ்ஞானபூர் வமாகவும் நடைமுறை சார்ந்தும் எடைபோட வேண்டும்.
இறுதி அர்த்தத்தில் தேவையிலிருந்து தர்மம் பிறக்கிறது, தேவையில் இருந்து உறவு பிறக்கிறது,
தேவையில் இருந்து சண்டை பிறக்கிறது, தேவையில் இருந்து சமாதானம் பிறக்கிறது.
தேவை என்ற ஒரு புள்ளியிற்தான் பரஸ்பர தேவை, விட்டுக்கொடுப்பு, கொடை, அபகரிப்பு, ஆக்கிரமிப்பு ஆகிய அனைத்தும் சந்திக்கின்றன. ஆதலால், அனைத்தையும் அவர வர் தேவைகளுக்குள்ளால் எடைபோட்டு அதற்கிணங்க வகுக்கப்படும் சாத்தியமான சமன்பாடுகளினால் அசைவை, நகர்வை, வாழ்வை, அரசியலை முன்னெடுக்க வேண்டும். புனிதமாகச் சொல்லப்படும் தெய்வீகக் காதலேயானாலும் ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்பது ‘உன்னில் என்னைக் காதலிக்கிறேன்’ என்ற தத்துவார்த்த உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது என்ற உண்மைக்குப் புறம்பாக அமைய முடியாது.
இவற்றை கணக்கில் கொள்ளாமல் பேசப்படும் எல்லாவிதமான தூய இலட்சியவாதங்களும் உயிரை உயிர் உண்டு வாழும் உயிரியல் தர்மத்திற் குள் ஈழத் தமிழினத்தை உண்ணப்படும் பலியாடு கள் ஆக்குவதில் முடிவடையும்.
முதலாவது அர்த்தத்தில், ஈழத் தமிழர் கள் புவிசார் அரசியல் சூழலின் கைதிகள். இலங்கை – இந்திய அரசுகளின் நலன்சார் பாக்குவெட்டிப் பிடிக்குள்ளும் கூடவே இந்தியாவின் அண்டை நாடான சீனாவினதும் உலகப் பெரு வல்லரசுகளினதும் கூட்டான நண்டுப் பிடிக்குள்ளும் அகப்பட்டிருக்கும் அப்பாவி மக்கள். இவ்வகையில், கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையானது சூழலால், அன்னியர் களால், எதிரிகளால் மட்டுமன்றி இவற்றுடன் கூடவே சொந்தத் தலைவர்களின் தவறான நடவடிக் கைகளினாலும் கட்டமைக்கப்படுகின்றது என்ற துயரகரமான பக்கத்தையும் கணக்கில் எடுத்துக் கணிப்பீடு செய்ய வேண்டும்.
இத்தகைய புவிசார் கட்டமைப்புக்குள் வைத்து இதன் வரலாற்று வளர்ச்சிப் போக்கை மிகச் சுருக்கமாகப் பார்க்க வேண்டியது அவசியம்.
தொடரும்….