அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் அகதிகள் போராட்டம்

242 Views

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட அகதிகள் தாங்கள் சிறைவைக்கப் பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மெல்பேர்ன் குடிவரவுத் தடுப்பு முகாமில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் மனுஸ் மற்று நவுருத்தீவுகளிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அகதிகள் எனக் கூறப்படுகின்றது. “நாங்கள் இங்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டோம். ஆனால் எந்த காரணமுமின்றி எங்களைத் தடுப்பிலேயே வைத்திருக்கின்றனர்,” என ஓர் அகதி தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply