அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீ பேரழிவுகளை உண்டாக்கியது. இது போன்ற காட்டுத்தீ மீண்டும் அடுத்த ஆண்டில் ஏற்படலாம் என விசாரணை அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் பயங்கரமான காட்டுத்தீ பரவியது. இதில் 33பேர் உயிரிழந்ததுடன் மிகப் பெரிய நிலப்பரப்பு தீயில் கருகின. இந்த காட்டுத்தீயினால் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் மட்டும் 2,476 வீடுகள் எரிந்து சாம்பலாயின. 5.5 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டது.
கடுமையான வறண்ட நிலப்பரப்பு, வெப்பம், கடுமையான அனல் காற்று மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவையே காட்டுத்தீ எற்பட முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றது. அடுத்த காட்டுத் தீ ஏற்படுவதற்கான பருவநிலை தோன்றி விட்டதாக மாகாண முதல்வர் கிளாடிஸ்லியான் கூறியுள்ளார்.
ஏற்கனவே அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கோடைகால காட்டுத்தீ தீவிரமடைய தொடங்கிய போது, நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் குளிர்கால காட்டுத்தீ இப்போது காணப்பட்டாலும், அது இதுவரை குறிப்பிட்ட அச்சுறுத்தலாக மாறவில்லை.
இதேவேளை காட்டுத்தீ பரவக்கூடிய அபாயகரமான பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக தங்களது வீட்டை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் வான்வழியாகவும், பூர்வகுடிகளின் எளிமையான திட்டங்கள் மூலமாகவும் அவுஸ்திலேிய அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
காட்டுத்தீயை ஏற்படுத்தும் இடி, மின்னலும் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது. வழக்கமான காட்டுத்தீயை விட இடி தாக்கி ஏற்படும் காட்டுத்தீ மிகவும் அபாயகரமானது எனக் கூறப்படுகின்றது.