அலாஸ்காவில் ரஷ்ய உளவு விமானத்தை இடைமறித்த அமெரிக்க போர் விமானங்கள்

அலாஸ்கா வான் பரப்பிற்கு அருகில் பறந்த ரஷ்ய உளவு விமானத்தை அமெரக்க போர் விமானங்கள் இடைமறித்ததாக றிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா தெற்கு கடற்கரைப் பகுதியில் அல்யுடின் தீவுகளுக்கு அருகே 65 கடல் மைல்கள் தொலைவில் சர்வதேச வான்பரப்பின் எல்லையில் DU – 142 ரக உளவு விமானம் பறந்துள்ளது.

இந்த விமானத்தை அமெரிக்க விமானப்படை F – 22 ரக போர் விமானங்கள் இடைமறித்துள்ளன. ஆனால் ரஷ்ய விமானங்கள் சர்வதேச எல்லைப் பகுதியில் பறந்து கொண்டிருந்தமையால் அமெரிக்க போர் விமானங்கள் திருப்பி அனுப்பியதாக அமெரிக்க விமானப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

இதுபோன்ற சம்பவங்கள் இது நான்காவது தடவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகின்றது. இரு நாடுகளுமே அவ்வப்போது எதிர் நாட்டின் எல்லைக்குள் ஆளில்லா உளவு விமானங்களை அனுப்பி எல்லைகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.