குடியேற்றவாசிகள் தொடர்பில் சுவிஸ் மக்களிடம் வாக்கெடுப்பு

குடியேற்றவாசிகள் தொடர்பான சர்வஜனவாக்கெடுப்பொன்றில் சுவிஸ் மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.

மக்களின் நடமாட்ட சுதந்திரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை தொடர்பிலேயே இந்த  சர்வஜனவாக்கெடுப்பில் சுவிட்சர்லாந்து மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் சனத்தொகையில் பெருமளவானவர்களாக வெளிநாட்டவர்கள் காணப்படுவதை வெளிப்படுத்திய பிரசாரங்களின் பின்னர் இந்த வாக்கெடுப்பு  நடைபெற்றுள்ளது.

சுவிஸின் வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி குடியேற்றவாசிகளுக்கு இடமளிப்பதை கட்டுப்படுத்தவேண்டும் என்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.

வெளிநாடுகளை சேர்ந்த இளையவர்கள் காரணமாக சுவிஸ் மக்களின் வேலைவாய்ப்புகள் பறிபோவதாக  வலதுசாரி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

அதேவேளை இதுவரை வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள், 63 வீதமான சுவிஸ்மக்கள் வலதுசாரி கட்சியின் வாதங்களை ஏற்கவில்லை என வெளிப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.