தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு

இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவு எதிர்வரும் 26.09.2020 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய சொற்பொழிவில்,

அண்டம் எனத் தமிழில் கூறுவதை ஆங்கிலத்தில் Universe என்பர். Universe ஆகிய இம் மேலை இந்தோ ஐரோப்பியச் சொல்லின் வரலாற்றினை விளக்குவதே இச்சொற்பொழிவாகும்.

மேலும் ‘ஒன்று-வட்டம்’ ஆகிய இரண்டு தமிழ்ச் சொற்களின் திரிபே universe சொல். இக்கருத்தை முனைவர் கு.அரசேந்திரன் மூலமொழி ஆய்வில் விளக்குகிறார்.

ஒன்று-ஒன்னு என்ற தமிழ் பத்துப் பதினைந்தாயிரம் ஆண்டின் முன்  மேற்கில் oi-no என ஓர் தொல் இந்தோ ஐரோப்பிய வடிவமாக(Proto Indo European form)  மாறியது. இந்த oi-no பிறகு இலத்தீனில் unus என்று திரிந்து அதே ஒன்றினைக் குறித்தது.

வட்டம் என்ற வளைவைக் குறிக்கும் தமிழ்ச்சொல் wer என தொல் இந்தோ ஐரோப்பிய வடிவமாக மாறி அதே வளைவுப் பொருளில் இலத்தீனில் versus எனத் திரிந்தது. versus ஆகிய இவ் வளைவு verse எனத் திரிந்து ஆங்கிலம் ஆகியது.

ஒன்று ஆகிய unus சொல்லும்  verse ஆகிய வளைவுச் சொல்லும் சேர்ந்தே இறுதியில் universe என்ற  சொல்வடிவம்  ஆகியது. turn in to one என்பதே universe சொல்லின் மூலப் பொருளாகும்.”ஒன்று -unus” ஆகி” வட்டம்-vert-verse எனவாகி இரண்டும் சேர்ந்து universe ஆனதை ஓர் மெய்யியல் உரையாக 26.09.2020 அன்று நடைபெறும் தொல்லாய்வில் விளக்குகின்றார்.

 

நிகழ்வு நடைபெறும் நேரம்:

அவுஸ்திரேலியா நேரம்: இரவு  22:00 மணி (AEST)

மலேசியா / சிங்கப்பூர் நேரம்: மாலை 20:00 மணி (SST)

இந்தியா / இலங்கை நேரம் : மாலை  17:30 மணி (IST)

இங்கிலாந்து நேரம்: பிற்பகல் 13:00 மணி (BST)

அமெரிக்கா நேரம்: காலை 08:00 (EST)

இந்த சொற்பொழிவு நேரலையாக நடைபெறவுள்ளது. இதற்கான இணையவழி தொடர்புகளுக்கு:

நேரலை: facebook.com/NostraticTamil

சொல்லாய்வில் பங்கேற்க மற்றும் கூடுதல் தகவலுக்கு கீழ் உள்ள சமூக ஊடக தளங்களில் இணையலாம்.

FaceBook: facebook.com/NostraticTamil

Twitter: twitter.com/NostraticTamil

Website: nostratictamil.com

YouTube: youtube.com/channel/UC-4MgLJ4K3anle5KJoy-noA