107 பேருடன் சென்ற பாகிஸ்தான் விமானம் கராச்சி குடியிருப்பில் விழுந்து நொருங்கியது

11

பாகிஸ்தான் லாகூர் நகரிலிருந்து 107 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானம் இன்று பிற்பகல் கராச்சி அருகில் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொருங்கியது.

இந்த விமானத்தில் 98 பயணிகளும், 9 ஊழியர்களும் பயணம் செய்திருந்தனர். இத்தகவலை  பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் இன்டர்நஷனல் எயார்லைன்ஸ் (PIA) நிறுவனத்தின் ஏ 320 என்ற விமானம் கராச்சி நோக்கி புறப்பட்டது.

கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தை அண்டிய போது, குடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கியது. இதில் 7வீடுகள் சேதமடைந்தது. அந்த வீடுகளில் இருந்தவர்கள் நிலை என்னவென்பது இதுவரை கண்டறியப்படவில்லை. அத்துடன் விமானத்தில் சென்றவர்களின் தகவல்களும் இன்னும் கண்டறியப்படவில்லை.

தீயணைப்புப் படையினர் குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலைகளும் தயார்நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.