பொருளாதார வீழ்ச்சி – அதிக பணத்தை அச்சிடும் சிறீலங்கா

கொரோனா வைரஸ் இன் தாக்கத்தால் முற்றாக வீழ்ந்துபோன பொருளாதாரத்தை சமாளிப்பதற்காக சிறீலங்கா அரசு அதிகளவு பணத்தை அச்சிட்டு வருவதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த மாதம் புதிதாக 240 பில்லியன் ரூபாய்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளதாகவும் இது தற்போது நிதி நெருக்கடியில் இருக்கும் மக்களின் தேவைகளை நிறைவு செய்ய பயன்படுத்தப்படுவதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது. இந்த நிதியில் 140 பில்லியன் ரூபாய்கள் வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சிறீலங்காவின் பொருளாதாரம் முற்றாக முடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள பொருளியல் ஆய்வாளர்கள், உலக பொருளாதாரம் அபிவிருத்தி அடைந்தால் தான் சிறீலங்கா இதில் இருந்து மீள முடியும் என தெரிவித்துள்ளனர்.