அடையாள அட்டை இலக்கம் மூலம் மக்களைக் கட்டுப்படுத்தும் சிறீலங்கா

அத்தியாவசிய தேவைகளுக்கான வெளியில் செல்லும் மக்களை கட்டுப்பதுத்துவதற்கு தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களை பயன்படுத்தப் போவதாக சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில் திங்கட் கிழமை நாட்களில் வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவோர் இலக்கம் 1அல்லது 2 என்ற இலக்கங்களை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களாக கொண்டுள்ளவர்கள் மட்டுமேயாகும் என அதரிவிக்கப்படுகின்றது.

வாரத்தின் ஏனைய நாட்களில் வீடுகளில் இருந்து வெளியில் செல்பவர்களின் விபரங்கள் வருமாறு:

செவ்வாய்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 3அல்லது 4 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்

புதன்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 5 அல்லது 6 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்

வியாழன்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 7 அல்லது 8 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்

வெள்ளி : அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 9 அல்லது 0 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்