இந்தியாவின் முக்கிய 10 இலக்கியங்கள் சீன, ரஷ்ய மொழிகளில் மொழிபெயர்ப்பு

17
7 Views

இந்தியாவின் முக்கிய 10 இலக்கியங்களை சீன, ரஷ்ய மொழிகளில் மொழிபெயர்க்க மத்திய கலாச்சார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்று(10) நடைபெற்ற 17ஆவது ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கலாச்சார அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா இணை அமைச்சர் பிரகலாத சிங் பட்டேல் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது, பகிர்ந்து கொள்ளப்படும் புத்த பாரம்பரியத்தைப் பற்றிய ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் முதலாம் கண்காட்சியை ஏற்பாடு செய்யும் பணிகளில் இந்திய தேசிய அருங்காட்சியகம் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

அவர்மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ரஷ்ய மற்றும் சீனம் ஆகிய ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மொழிகளில் 10 இந்திய இலக்கியங்களை சாகித்தய அக்கடமி மொழிமாற்றம் செய்து வருவதாக கூறினார். இந்திய இலக்கியங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இந்தப் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here