சேமமடு பகுதியில் மாட்டு சாண விசவாயு தாக்கி இளைஞர் சாவு 

369 Views

வவுனியா, ஓமந்தை, சேமமடு பகுதியில் உள்ள காணி ஒன்றில் பல மாதங்களாக குவிக்கப்பட்டிருந்த மாட்டு சாணத்தினை பாரவூர்தி ஒன்றில் சிலர் ஏற்றியுள்ளனர். இதன்போது சாணத்தை ஏற்றிய இளைஞர் ஒருவர் இளைப்பாறுவதற்காக குறித்த சாணிக் கும்பத்தின் மேல் இருந்துள்ளார்.

இதன்போது மாட்டு கழிவில் இருந்து தாக்கிய விசவாயு காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் ஓமந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவசர சிகிச்சையளிக்கப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் மேலதிக சிகிச்சைக்காக குறித்த இளைஞன் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதும் குறித்த இளைஞன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (12) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

குறித்த சம்பவத்தில் எஸ்.ரஞ்சிதகுமார் (வயது 28) என்ற இளைஞனே மரணமடைந்தவராவார்.

Leave a Reply