நேற்று இன்று நாளை: விவசாயத்தில் தொழில்நுட்பம் | தாஸ்

1,444 Views

விவசாயத்தில் தொழில்நுட்பம்

தாயக மேம்பாடு-விவசாயத்தில் தொழில்நுட்பம்

இன்று தவறான தொழில்நுட்ப விளைவால் விவசாய உற்பத்தி மிகவும் மோசமாகப் பாதிப்பு அடைந்துள்ளது. கூட்டெரு compose  உற்பத்தியால் முழுமையான அறுவடையை உடனடியாகப் பெற முடியாது. இதனை செயல்படுத்த குறைந்தது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக முயற்சி எடுக்க வேண்டும்.

விவசாயத்தில் தொழில்நுட்பம்மேலும் சிறு தானிய உற்பத்தி செய்த உடன் சணல் உற்பத்தி செய்ய வேண்டும். சகல சணல்களும் அறுவடைக்கு முன் தாக்க வேண்டும். எல்லா விவசாய நிலங்களிலும் சகலவிதமான மர இலை, குழைகளை கூட்டெருவுடன் இணைத்து வயல் தோட்டங்களில் தாக்க வேண்டும்.

விவசாயத்தில் தொழில்நுட்பம் என்கிற கருப்பொருள் இன்று எல்லோராலும் பேணப்படுகின்றது.  மனிதனின் அடிப்படைத் தேவைக்கு உணவு, உடை, உறையுள் மிகவும் அவசியமாகும். உணவு இல்லையேல் மனிதன் இல்லை. எனவே விவசாயம் மிகவும் முக்கியமானது.

வருடாவருடம் இந்த உலகில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதன் காரணமாக மனிதனின் தேவைகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. எனவே நமது விவசாய உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.  அதிகரிக்க வேண்டும்

கடலுணவு, மாமிசம் போன்றவை இருக்கின்றபோதும், மனிதன் தனது அன்றாடத் தேவைக்கு பெரிதும் சார்ந்து இருப்பது விவசாய உற்பத்திகளையே  ஆகும்.  விவசாயத்தின் தேவை அதிகமாக இருப்பதாலேயே உற்பத்தி அதிகரிக்கவேண்டும்.

மனிதனின் நாளாந்த இயக்கத்திற்கு தாவர உணவுகள், பழங்கள், கிழங்கு வகைகள் மிகவும் அவசியம். நெல் அரிசி சோறு போன்றவைகளே தமிழர்களின் பிரதான பாரம்பரிய உணவு வகை. எனவே எமது மக்களுக்கு சகல வயல்களிலும்  முழுமையான விவசாய உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும்.

உழவுத் தொழில் இல்லையேல் உணவு இன்றி மக்கள் பஞ்சத்தில் மடிய நேரிடும். எனவே எமது தாயகத்தின் வளத்தை முழுமையாகப் பயன்படுத்தி விவசாயத்தையும் மேற்கொள்ள வேண்டுமாயின், உரிய காலத்தில் உர வகைகள், கிருமி நாசினிகள்  போன்றவற்றை திட்டமிட்ட அடிப்படையில் வழங்க வேண்டும்.

விவசாயத்தில் தொழில்நுட்பம்நாட்டில் பொருளாதார தடை இருந்த காலத்தில் பல வகையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உரம், கிருமிநாசினிகள் வழங்கப்பட்டமையால் பொருளாதார தடை இருந்த போதும் தடையின்றி விவசாய உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு, ஒரு தற்சார்பு பொருளாதாரத்தை அன்று தாயகம் கொண்டிருந்தது. இன்று சகல தடைகளும் நீக்கப்பட்ட போதும் உரம், கிருமிநாசினி இல்லாமையால் உற்பத்தி 40 சதவீதம் குறைந்துள்ளது இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.

இந்த நிலை நாளை தொடருமாயின் மக்களின் பட்டினிச்சாவைத் தவிர்க்க முடியாத நிலை வடக்கு-கிழக்கு மட்டுமின்றி இலங்கை முழுவதும் ஏற்படும். எனவே பொருத்தமான முடிவுகள் எடுத்து விவசாய உற்பத்தியை முழுமையாக மேற்கொள்ள  வேண்டும்.

விவசாயத்தில் தொழில்நுட்பம்கிளிநொச்சியில் உள்ள விவசாய பீடம் சேதனப் பசளை முறையினைப் பயன்படுத்தி நெற் செய்கையை முழு அளவில் மேற்கொண்டுள்ளது. இந்த பயன் வட பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் சென்று சேரவேண்டும். முழுமையான பயிற்சிகள் செய்முறைகள் மக்களுக்கு மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு குளத்திற்கும் மேல் முழு அளவில் விவசாயம் செய்கை பண்ண வேண்டும். மக்கள் போஷாக்கான உணவை உண்ண வேண்டும். இதற்கு எல்லா நிலத்திலும் சிறுதானிய செய்கை, விவசாய, பழ மரக்கன்றுகள், மரக்கறி உற்பத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு சர்வதேச நாடுகளில் வாழும் தாயக உறவுகள் உரிய பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும். துறை சார்ந்தவர்கள், விவசாய பீடத்தினர் மக்களுக்கான ஆலோசனைகளை வழங்க முன்வர வேண்டும்.

இன்று வெங்காயம், கத்தரி உட்பட சகல மரக்கறிகளும் கிலோ 150 க்கு மேல் உள்ளது. மரவள்ளி, உருளை கிழங்கு வகைகள் முழு அளவில் மேற் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஒரு தற்சார்பு பொருளாதாரத்தை நாம் மீண்டும் உருவாக்க முடியும். நம் மண்ணில் விளையும் பொருட்களை கொண்டு எம் மக்களின் தேவையை தீர்க்கும் போது இந்த விலை ஏற்றத்தை குறைத்து  பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.

இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் பல ஆயிரம் விவசாய நிலங்கள் பல்வேறு சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். எமது மண்ணில் ஒவ்வொரு குடும்பமும் தன்னிறைவான வளர்ச்சியைக் கொண்டு வாழ வேண்டும். ஒவ்வொரு அங்குல நிலத்திலும் எல்லா காலங்களிலும் விவசாய உற்பத்தி மேற்கொள்ள வேண்டும்.

சொட்டு நீர் பாசனம், தூறல் நீர் பாசனம் போன்ற முறைகளைப் பயன்படுத்தி குறைந்த நீரைப் பயன்படுத்தி அதிக பலனைப் பெற முயற்சிகள் எடுக்க வேண்டும். எமது மக்கள் வளத்தை உச்சமாக பயன்படுத்த வேண்டும். துறை. சார்ந்தவர்கள் பொருத்தமான ஆலோசனைகளை வழங்க முன்வர வேண்டும். இந்த நிலைமை மாற்றம் ஏற்பட அம்மக்களில் உள்ள விவசாய போதனா ஆசிரியர்கள் முழுமையாக நடைமுறைக்கு ஏற்ப ஆலோசனை வழங்க வேண்டும் என்பதே இன்று மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விவசாயத்தில் தொழில்நுட்பம்

Tamil News

2 COMMENTS

  1. […] தாயக மேம்பாடு-விவசாயத்தில் தொழில்நுட்பம்: இன்று தவறான தொழில்நுட்ப விளைவால் விவசாய உற்பத்தி மிகவும் மோசமாகப் பாதிப்பு அடைந்துள்ளது. கூட்டெரு compose உற்பத்தியால் முழுமையானமின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-170-february-19/ https://www.ilakku.org/  […]

Leave a Reply