வடக்கில் நேற்று 8 பேர் கொரோனாவுக்கு பலி

380 Views

ஒரே நாளில் 214 பேர் மரணம்வடக்கில் நேற்று 8 பேர் கொரோனாவுக்கு பலி: கொரோனா தொற்றால் நேற்று மட்டும் யாழ்ப்பாணத்தில் 6 பேரும், கிளிநொச்சியில் இருவருமாக வடக்கில் 8 பேர் உயிரிழந்தனர்.

யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 62 வயது ஆண், யாழ். மாநகரை சேர்ந்த 65 வயது பெண், மாவிட்டபுரத்தை சேர்ந்த 63 வயது ஆண், கொடிகாமத்தை சேர்ந்த ஆண், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செம்பியன்பற்றை சேர்ந்த 63 வயது ஆண், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 89 வயதுடைய ஆண் ஆகியோரே உயிரிழந்தனர்.

மொழியியல் பகுப்பாய்வாளர் ஓய்வுநிலைப் பேராசிரியர் குருசாமி அரசேந்திரன் செவ்வி | தமிழகக்களம் | ILC

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 242 ஆக அதிகரித்தது. இதேபோன்று, கிளிநொச்சி பொது மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட 72 வயதுடைய இரு ஆண்களும் நேற்று தொற்றால் உயிரிழந்தனர்

ilakku-Weekly-Epaper-145-August-22-2021

Leave a Reply