யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றித்தினருக்குமிடையிலான கலந்துரையாடலின் பின்பு பீடங்களின் கற்றல் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கும் தினம் குறித்து அறிவிக்கப்படும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் மெய்யழகன் பாலேந்திரா தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் வரும் புதன்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அதன் பின்னரே யாழ் பல்கலைக்கழக பீடங்களின் கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கும் தினம் குறித்து அறிவிக்கப்படும்.
வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்படும் அறிவிப்பின் பிரகாரம் விடுதிகளுகளுக்கு வருவது நன்று. மேலும் பரீட்சைகள் அறிவிக்கப்பட்ட திகதியில் எதுவித மாற்றமும் இன்றி தொடர்ந்து நடைபெறும், என்றார்.
எதிர் வரும் 17ஆம் திகதி அனைத்து பல்கலைக்கழகங்களின் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிடும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையிலேயே மேற்குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது