சிறீலங்காவின் பொருளாதாரம் கடுமையான பாதிப்புக்களை சந்தித்து வருகின்றது. கொரோனா வைரசின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும் தற்போதைய அரசின் நடவடிக்கைகள் அதன் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்திவருகின்றது
கடந்த ஆண்டின் இறுதியில் 7.5 பில்லியன் டொலர்களாக இருந்த சிறீலங்காவின் கையிருப்பு. கடந்த ஜுன் மாதம் 6.5 பில்லியன் டொலர்களாக வீழ்ச்சி கண்டுள்ளது. எனினும் கடனுக்கான மீள் செலுத்தும் தொகைகள் அதிகம் உள்ளதால், மேலும் 1 பில்லியன் டொலர்கள் நிதி இழக்கப்படும் சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலமை சிறீலங்காவின் வெளிநாட்டுக் கையிருப்பை அதிகம் குறைப்பதுடன், எதிர்வரும் 2021 ஆம் ஆண்டுக்கான கடன் மீள்செலுத்தும் தொகையான 4 பில்லியன் டொலர்களை சிறீலங்கா அரசின் கையிருப்பு எட்டவேண்டும். எனவே சிறீலங்கா அரசு அதற்காக அனைத்துலக நாடுகளிடம் இருந்து அதிக கடன்களை பெறும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.