உலக சனத்தொகை 800 கோடியை அடைந்தது- ஐநா

94 Views

உலக சனத்தொகை 800 கோடியை அடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

உலக சனத்தொகை 800 கோடியாக அதிகரிக்கிறது. 2011 ஒக்டோபர் 31 ஆம் திகதி உலக சனத் தொகை 700 கோடியாக அதிகரித்தது. ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் அறிவித்திருந்தது.

ஆதன்பின் 11 ஆண்டுகளில் உலக சனத்தொகை மேலும் 100 கோடியினால் அதிகரித்துள்ளது. இதேவேளை அடுத்த வரும் உலகில் ஆகக்கூடுதலான சனத்தொகையைக் கொண்ட நாடாக சீனாவைக் கடந்து இந்தியா முன்னேறும் எனவும் ஐ.நா மதிப்பிட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டு உலக சனத்தொகை 850 கோடியாக அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. உலக சனத்தொகை 900 கோடியாகுவதற்கு 15 வருடங்கள் தேவைப்படும் என ஐநா மதிப்பிட்டுள்ளது. அதாவது, 2037 ஆம் ஆண்டில் உலக சனத்தொகை 900 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply