புது வருடத்தின் முதலாவது நாளின் கணிப்பீட்டின்படி உலகின் சனத்தொகை 71 மில்லியன் மக்களால் அதிகரித்துள்ளது. அதாவது உலகின் மொத்த சனத்தொகை 8.09 பில்லியனாக அதி கரித்துள்ளது என அமெரிக்காவின் குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் இந்த வாரம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டின் மக்கள் தொகை அதிகரிப்பு குறை வடைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு 75 மில்லியன் மக்கள் தொகை அதிகரித்திருந்தது. ஆனால் 2024 ஆம் ஆண்டு அது 71 மில்லிய னாக குறைவடைந்துள்ளது.
ஒவ்வொரு வினாடியும் உலகில் 4.2 பேர் பிறப்பதுடன், இருவர் மரணிக்கின்றனர். கடந்த வருடம் அமெரிக்காவின் மக்கள் தொகை 2.6 மில்லியனால் அதிகரித்துள்ளது. தற்போது அமெரிக்காவின் மக்கள் தொகை 341 மில்லியனாகும். அமெரிக்காவில் 9 வினாடிக ளுக்கு ஒரு குழந்தை பிறக்கும் அதேசமயம், 9.4 வினாடிகளுக்கு ஒருவர் மரணிக்கின்றார். குடிவரவினால் 23.2 வினாடிகளுக்கு ஒருவர் அமெரிக்காவின் மக்கள் தொகையில் இணைந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.