சீனாவை மலேரியா இல்லாத நாடாக ‘உலக சுகாதார அமைப்பு’ அறிவிப்பு

சீனாவை மலேரியா இல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனம் இன்று ஜூன் 30 ஆம் பிரகடனப்படுத்தியுள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வந்த மலேரியா நோய் முற்றிலும் ஒழிபட்டுள்ளதாவும், நுளம்புகளால் பரவும் மலேரியா நோயை ஒழிப்பதற்காக 70 ஆண்டுகால போராடிய சீனாவுக்கு கிடைத்த வெற்றி இது என்றும் உலக சுகாதார அமைப்பு பாராட்டி சான்றழித்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக ஒருவருக்கு கூட மலேரியா காய்ச்சல் பாதிப்பு இல்லை என்ற நிலையை எட்டி சீனா சாதித்துள்ளது.

இந்நிலையில் மலோரியா தொற்றை நாட்டில் இருந்து முற்றாக அகற்றியதற்காக சீன மக்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் கூறியுள்ளார்.

எல் சால்வடார் (2021), அல்ஜீரியா மற்றும் ஆர்ஜென்டினா (2019), மற்றும் பராகுவே மற்றும் உஸ்பெகிஸ்தான் (2018) ஆகிய நாடுகள் மலேரியாவை முற்றிலும் ஒழுத்த நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இலங்கையை மலேரியா இல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தியது.

குறைந்தது மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக மலேரியா காய்ச்சல் இல்லாதாக நாடுகள் உலக சுகாதார அமைப்பின் மலேரிய இல்லாத நாட்டுக்கான சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அந்த நாடுகள் சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் மலேரியா மீண்டும் ஏற்படாது என்பதற்கான நடவடிக்கைகளுக்கான ஆதாரங்களையும் நிரூபிக்க வேண்டும். அதன்படி சீனா 2020 -இல் உலக சுகாதாரத்துறையிடம் சான்றிதழ் பெற விண்ணப்பித்தது.

அவுஸ்திரேலியா (1981), சிங்கப்பூர் (1982) மற்றும் புருனே (1987) ஆகிய மேற்கு பசிபிக் நாடுகள் மலேரியாவை ஒழித்ததற்கான சான்றிகளை பெற்றுள்ளன.

நவம்பரில் வெளியிடப்பட்ட ஆண்டு அறிக்கையின்படி, 2000 -ஆம் ஆண்டில் 7,36,000 பேரும், 2018 -இல் 4,11,000 பேரும், 2019-இல் 4,09,000 பேரும் மலேரியாவால் உயிரிழந்துள்ளனர். இதில், 90 சதவீதத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் ஆப்பிரிக்காவில் நிகழ்ந்துள்ளன.

இதற்கிடையில், 2019 -இல் உலக அளவில் மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை 229 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த நான்கு ஆண்டுகளாக அதே நிலையிலேயே உள்ளது.

இந்நிலையில், 1950 -ஆம் ஆண்டு மலேரியாவுக்கு எதிரான போரைத் தொடங்கியது சீனா, வீட்டுக்கு வீடு மருந்து அடிக்கும் பணியை தொடங்கியது. 70 ஆண்டுகாலை போராட்டத்துக்கு பின்னர் வெற்றிகரமாக முற்றிலும் மலேரியாவை சீனா ஒழித்துள்ளதாக உலக சுகாதாரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.