உலகின் விநியோகத் தொடர் கடும் பாதிப்பு

57 Views

உக்ரைனில் இடம்பெறும் மோதல்கள் காரணமாக உலகின் விநியோக வழிகளில் கடுமையான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கொள்கலன்களை ஏற்றிவரும் 20 விகிதமான கப்பல்கள் பல்வேறு துறைமுகங்களில் முடங்கிப் போயுள்ளதாகவும் றோயல் கனடா வங்கி  தெரிவித்துள்ளது.

கோவிட்-19 நெருக்கடிகளும் தற்போது சீன துறைமுகங்களில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. அங்கு 344 கப்பல்கள் காத்திருக்கின்றன. கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது இது 34 விகித அதிகரிப்பாகும்.

சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்வதற்கு தற்போது 74 நாட்கள் எடுக்கின்றன. இது வழமையான நேரத்தை விட மிக அதிகம். ஐரோப்பாவுக்கு செல்லும் கப்பல்களும் மேலதிகமாக 4 அல்லது 5 நாட்களை எடுக்கின்றன.

உக்ரைன் சமர் காரணமாக கப்பல்களின் காப்புறுதித் தொகை அதிகரித்துள்ளது. மேலும் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் கப்பல்களுக்கான எரிபொருட்களின் விலை 66 விகித்தால் உயர்ந்துள்ளது. ரஸ்ய கப்பல்களுக்கான தடையும் ஏனைய துறைமுகங்களில் கடல் போக்குவரத்து நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளதாக கனடா வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

Tamil News

Leave a Reply