பிச்சைப் பாத்திரம் ஏந்தும் இலங்கை – பஞ்சத்தின் பிடியில் மக்கள்

345 Views

பிச்சைப் பாத்திரம் ஏந்தும் இலங்கை

பிச்சைப் பாத்திரம் ஏந்தும் இலங்கை

மீளமுடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டு போயுள்ள நிலையில், நிதி உதவி கோரி சர்வதேச நாடுகளிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் நிலை இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

மீளச் செலுத்த வேண்டிய பட்ட கடன் ஒருபக்கமும் நாளாந்த அரச இயந்திரத்தை கொண்டியக்குவது மறுபுறமுமாக திண்டாடும் நிலையில் ராஜபக்சக்களின் அரசு திணறிக்கொண்டிருக்க மக்களின் நிலை பரிதாபகரமாக மாறியுள்ளது.

வருமானததிற்கு வழியில்லாது மக்கள் விழிபிதுங்கி நிற்கையில் விலைவாசி உயர்வு விண்ணைத்தொடும் அளவிற்கு அதிகரித்த வண்ணமுள்ளது.

விலையுயர்த்தப்பட்டாலும் அத்தியாவசிய பொருட்களை தடையின்றி பெற்றுக் கொள்வதும் பெரும் சவாலான விடயமாகவே அமைந்துள்ளது.

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தீர்வுகாணப்படாத நிலையானது பல்வேறு துறைகளில் சங்கிலித்தொடரான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு சமையலறை தொடக்கம் உணவக தொழில்துறையையும் வெகுவாகவே பாதித்துள்ளது.

Tamil News

Leave a Reply