இராணுவம் தயார் நிலையில்; ஜனாதிபதி கோட்டாபய உத்தரவு

175 Views

army இராணுவம் தயார் நிலையில்; ஜனாதிபதி கோட்டாபய உத்தரவுஇலங்கையில் நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு குறித்து ஜனாதிபதி அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாற்பதாவது அதிகாரமான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆம் பிரிவு மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பாராளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் போது ஜனாதிபதியால் வழங்கப்பட்ட அறிவிப்புகளை சமர்ப்பிக்கும் போது சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply