உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு யார் காரணம் என்பதை இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் –திருத்தந்தை பிரான்சிஸ்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு யார் காரணம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு யார் காரணம் என்பதை இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தோருக்காக வத்திக்கானில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கும் விசேட ஆராதானை இன்று இடம்பெற்றுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தோருக்காக வத்திக்கான் புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவில் ஒப்புக்கொடுக்கப்பட்ட விசேட திருப்பலியில் பரிசுத்த திருத்தந்தை  ஃபிரான்சிஸ் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது பேராயர் மால்கம் இரஞ்சித் ஆண்டகையினால் பரிசுத்த திருத்தந்தை ஃப்ரான்சிஸூக்கு நினைவு சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய லயனல் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இதன்போது தமிழில் ஆராதனை கூட்டத்தை நடத்தினார்.

வத்திக்கான் சென்றிருந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்களது உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களும் இன்றைய விசேட திருப்பலி நிகழ்வில் பங்குபற்றியிருந்த நிலையில் அவர்களையும் திருத்தந்தை சந்தித்திருந்தார்.

இலங்கையிலிருந்து பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் ஆண்டகை தலைமையிலான 60 பேர் கொண்ட குழுவினர் அண்மையில் வத்திக்கான் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு யார் காரணம்

இந்நிலையில், வத்திக்கானில் இடம்பெற்ற விசேட ஆராதனையின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு யார் காரணம் என்பதை இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் தயவுசெய்து நீதிக்காக-உங்களின் மக்களிற்காக இந்த சம்பவங்களிற்கு யார் காரணம் என்பதை நிச்சயமாக தெளிவுபடுத்துங்கள் என்றும்  கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு யார் காரணம்

இது நாட்டிற்கு அமைதியையும் மனச்சாட்சியையும் கொண்டுவரும் என அவர் தெரிவித்துள்ளார்.