சுப்பர் டெல்டா பரவுகின்றதா: நாட்டில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா? என்பதைக் கண்டறிந்து, பரிசோதனை அறிக்கை ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பரிசோதனை குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தால் டெல்டா வைரஸ் திரிபு தொடர்பாக மேற்கொண்ட பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இலக்கு மின்னிதழ் 145 ஆகஸ்ட் 29, 2021 | Weekly Epaper
இதற்கமைய கொழும்பு நகரில் 100 சதவீதம் டெல்டா வைரஸ் திரிபு பரவியுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
அத்துடன் நாட்டின் ஏனைய சில பகுதிகளிலும் டெல்டா வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டது எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தரவைத் தொடர்பு கொண்டு வினவியபோது இதற்குப் பதிலளித்த அவர், “இலங்கையில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா என்பதைக் கண்டறிய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக பரிசோதனைக் குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். ஒரு வாரத்துக்குள் அறிக்கை வெளியிடப்படும்” என்றார்.