அவுஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் விடுதலை எப்போது?

349 Views

அகதிகள் விடுதலை எப்போது

சமீபத்தில் அவுஸ்திரேலிய அரசால் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 அகதிகளுக்கு விசா வழங்கப்பட்டு தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  அகதிகள் விடுதலை எப்போது என்பதே எல்லோரதும் வினாவாகும்.

இதன் மூலம் அவர்களுக்கு ஒரு தற்காலிக விடுதலை கிடைத்திருக்கிறது. ஆனால், ஒரு நாட்டில் நிரந்தரமாக வாழ்வதற்கான போராட்டம் தொடர்கிறது. மூன்றாவது ஒரு நாட்டில் மீள்குடியமர்த்தப்படும் வரை அவுஸ்திரேலிய அரசு வழங்கியுள்ள இணைப்பு விசாக்கள் மூலம் இந்த அகதிகள் அவுஸ்திரேலியாவில் வசிக்கலாம்.

ஜீவா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனும் இலங்கைத் தமிழ் அகதி, தான் விடுவிக்கப்படுவதாக சொல்லப்பட்ட செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்கிறார். விடுதலை எனும் உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என

அல்ஜசீரா ஊடகத்திற்கு ஜீவா வழங்கியுள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக, காவலாளிகளின்றி நடக்கவும் சுவாசிக்கவும் தற்போதே முடிந்திருக்கிறது என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply