வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினம் ஓகஸ்ட் 30 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், இலங்கையிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டம் இரண்டாயிரம் நாட்களைத் தாண்டிச்சென்றிருக்கின்றது. இந்தப் பின்னணியில் பாதிக்கப்பட்ட ஒருவா் என்ற முறையிலும் இது தொடா்பில் ஆட்கொணா்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தவா் – காணாமல் ஆக்கப்பட்டோருக்காக தொடா்ந்தும் குரல்கொடுத்து வருபவருமான வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சா் அனந்தி சசிதரன் உயிரோடைத் தமிழ் தாயக களம் நிகழ்வுக்காக வழங்கிய நோ்காணலின் முக்கியமான பகுதிகளை இலக்கு வாசகா்களுக்காக தருகிறோம்.