கிறிஸ்மஸ் பண்டிகை போதிக்கும் தத்துவத்தினை நாமும் பின்பற்ற வேண்டும்: சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா

நாமும் பின்பற்ற வேண்டும்

‘உலகம் முழுவதுமுள்ள கிறித்தவர்கள் வெகு விமர்சையாக கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில், உலகில் பேரன்பும், மகிழ்ச்சியும் என்றும் தழைத்தோங்கிட வேண்டுமென்ற உயர் தத்துவத்தினை போதிக்கும் கிறிஸ்மஸ் திருநாளை கொண்டாடும் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்” என சிறி ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தெரிவித்துள்ளார்.

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வெளிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவிது்ள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் அனைத்து கிறிஸ்தவ மத சகோதர, சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துகள். அவர் பிறந்த இந்நன்னாளில் அமைதியையும், சகிப்புத் தன்மையையும், சகோதரத்துவத்தையும் கடைப்பிடித்து நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். கிறிஸ்மஸ் பண்டிகை போதிக்கும் தத்துவத்தினை நாமும் பின்பற்ற வேண்டும்.

இயேசுபிரான் போதித்த தியாகம், மன்னிப்பு, அன்பு, சமாதானம் ஆகியவற்றை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும். கோவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடும் மக்களின் யுத்த வடுக்கள் மறைந்து எல்லோர் வாழ்விலும் புதிய ஒளிக் கீற்றுக்கள் வீசி நல்லெண்ணத்துடனும், ஒற்றுமையுடனும், பொருளாதார வளத்துடனும் வாழ இந்த நாள் இனியதாக அமைய வேண்டும் என வேண்டுகின்றேன்.” என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News