கம்போடியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக புலம்பெயர்ந்தவர்கள் நாடுகடத்தல் 

புலம்பெயர்ந்தவர்கள் நாடுகடத்தல் 

கம்போடியாவில் பணியாற்றுவதற்காக சட்டவிரோதமாக நுழைந்த தாய்லாந்தைச் சேர்ந்த 25 புலம்பெயர்ந்தவர்களை கம்போடிய அதிகாரிகள் நாடுகடத்தியுள்ளனர். 

தாய்லாந்தின் Poipet நகரத்தில் சிறைவைக்கப் பட்டிருந்த இவர்களில் 11 பேர் பெண்கள் 14 பேர் ஆண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 15ம் திகதி முதல் புலம்பெயர்ந்தவர்கள் நாடுகடத்தல்  நான்கு நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.

கடந்த நவம்பர் 15ம் திகதி 66 பேரும் நவம்பர் 24ம் திகதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட 34 பேர் உள்பட 103 பேரும் டிசம்பர் 3ம் திகதி 143 பேரும் தாய்லாந்துக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

Tamil News