இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

369 Views

அவுஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

கோட்டா அரசுக்கு எதிராக மக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ரம்புக்கனை சம்பவத்தை அடுத்து பதற்றமான நிலை உருவாகியுள்ள பின்னணியில் இலங்கை செல்லும் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகளுக்கு அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு சுற்றுலா செல்லும் போது அதிக அவதானத்துடன் செயற்படுமாறு தமது நாட்டு பிரஜைகளை இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் பல பாகங்களில் முன்னெடுக்கப்படும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், எரிபொருள் இன்மை மற்றும் மின்தடை என்பன தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
இதற்கமைய வாகன போக்குவரத்து மற்றும் பொது போக்குவரத்தின் போது இன்னல்கள் ஏற்படக் கூடும் என அவுஸ்திரேலியா தமது நாட்டு பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது.

Tamil News

Leave a Reply