இலங்கையில் வன்முறை :ஆளுங்கட்சி எம்.பி., காவல்துறை அதிகாரி உட்பட 8 பேர் பலி – 400 இற்கு மேறபட்டோர் காயம்

கொழும்பில் போராட்டம் நடத்தியவர்கள் மீது பொது ஜன பெரமுன கட்சியினர் மேற்கொண்ட வன்முறை தாக்குதல் சம்பவம் மற்றும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு தழுவியதாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்களில் 8 பேர் பலியாகி யுள்ளதுடன் 400 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு சம்பவத்தை அடுத்து நாடாளாவிய ரீதியில் நேற்று மதியம் முதல் பதிவான அமைதியின்மை மற்றும் மோதல் சம்பவங்களின்போது, ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர், காவல்துறை அதிகாரி  உட்பட 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். போராட்டக்காரர்கள் உட்பட 400 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நிட்டம்புவையிலும், வீரகெட்டியவிலும்  துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. காயமடைந்தவர்களில் சிலர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாடு முழுவதும் காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை (11) காலை 7.00 மணி வரையில்  இந்த சட்டம் அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil News