புலம்பெயர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு கோட்டாபயவிடம் விக்டோரியா நியுலாண்ட் தெரிவிப்பு

182 Views
புலம்பெயர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தைகளை
epa04666359 Victoria Nuland, Assistant Secretary of State for European and Eurasian Affairs at the United States Department of State, talks with Greek Prime Minister Alexis Tsipras (not pictured) in Athens, Greece, 17 March 2015. Victoria Nuland is in Athens on one-day working visit. EPA/ORESTIS PANAGIOTOU

கனடா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பாவில் உள்ள புலம்பெயர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்பின் போது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரத்திற்கான துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட் (Victoria Nuland)தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரத்திற்கான துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பை வெள்ளிக்கிழமை சந்திக்கவுள்ளமை உட்பட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதி துணை இராஜாங்க செயலாளருக்கு தெளிவுபடுத்தினார்.

இந்த சந்திப்பின்போது அமெரிக்கா கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கையர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தை துணை இராஜாங்க செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் பசுமை தொழில்நுட்பத்தை இலங்கைக்கு அறிமுகப் படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த துணை இராஜாங்க செயலாளர், சைபர் மற்றும் தகவல்தொழில்நுட்ப துறைகளில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு உண்மையை கண்டறியும் பொறிமுறை குறித்தும் விக்டோரியா நியுலாண்ட் வலியுறுத்தினார். வட மாகாணத்தின் அபிவிருத்திக்காக முதலீடுகளை செய்வதற்கு முன்வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply