மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் புகழுடல் தகனம் செய்யப்பட்டது

மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் பூதவுடல் தீயுடன் சங்கமம்! |  Virakesari.lk

காலஞ்சென்ற மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி கிரிகைகள் இன்று (13) இடம்பற்றன. சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி தமது 62 ஆவது வயதில் கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காலமானார்.

சுமார் 40 வருடங்களுக்கும் மேற்பட்ட ஊடகத்துறை அனுபவத்தை கொண்ட இராஜநாயகம் பாரதி உயிரோடைத் தமிழ் வானொலியில் நாளாந்தம் தாயகச் செய்திகளை தொகுத்து வழங்கியிருந்தார்.
அத்துடன் வாராந்தம் தாயகக்களம் என்ற நேர்காணலையும் வானொலிக்காக அவர் செய்து வந்தார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி வாராந்தம் இலக்கு மின்னிதழில் அகிலன் என்ற பெயரில் அரசியல் கட்டுரைகளை எழுதியிருந்தார்.

இந்தநிலையில் அன்னாரின் புகழுடல் பலாலி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று இறுதி கிரிகைகள் இடம்பெற்றன. இதன்போது பல ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
இன்று முற்பகல் அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட்டன.

இதன்போது பல அரசியல் தலைவர்கள் இராஜநாயகம் பாரதிக்கு இரங்கல் வெளியிட்டதுடன் தங்களது நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.  பின்னர் இடம்பெற்ற ஈமக் கிரிகைகளைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி அளவில் கொக்குவில் இந்து மயானத்தில் அன்னாரின் புகழுடல் தகனம் செய்யப்பட்டது.