தமிழ் ஈழப் போரில் தங்கள் உயிர்களை ஈகம் தந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய வைகோ

569 Views

தமிழ் ஈழப் போரில் தங்கள் உயிர்களை ஈகம் தந்த மாவீரர்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.

தமிழ் ஈழப் போரில் தங்கள் உயிர்களைமாவீரர் நாளை முன்னிட்டு, இன்று 27.11.2021 காலை 7 மணி அளவில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், கொட்டும் மழைக்கு இடையே சுடர் ஏற்றி வைத்து, தமிழ் ஈழப் போரில் தங்கள் உயிர்களை ஈகம் தந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.
நிகழ்வில் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், டி.சி.இராசேந்திரன், கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி, சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி மற்றும் எழும்பூர் பகுதிச் செயலாளர் தென்றல் நிசார் உள்ளிட்ட ஏராளமானோரும், கழக நிர்வாகிகளும் பங்கேற்று புகழ் வணக்கம் செலுத்தினர்.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 தமிழ் ஈழப் போரில் தங்கள் உயிர்களை ஈகம் தந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய வைகோ

Leave a Reply