ரணிலுக்கு எதிராக திரும்பிய காலிமுகத்திடல் போராட்டம்

இலங்கையில்  ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய  பின் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதிவியேற்றிருக்கும் நிலையில், தற்பொது அவருக்கு எதிராக  போராட்டம் தீவரமடைந்துள்ளது.

 “ரணில் கோ ஹோம்’ என்ற ஆங்கில வாசகம் கொண்ட பட்டைகளை தலையில் கட்டிக்கொண்டு பலர் போராட்டத்தில் பங்கேற்றிருக்கின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதியாக போட்டியில் இருப்பதால், ரணில் விக்கிரமசிங்க தன்னிச்சையாக  ஜனாதிபதியாவற்கான வாய்ப்பு இல்லாமல்  உள்ளது. அவர் ஜனாதிபதியாக வேண்டுமானால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றாக வேண்டும்.

கோட்டாபயவின்   கட்சி ரணிலுக்கு ஆதரவளிப்பதால் அவருக்கு வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், காலிமுகத்திடலில் ரணிலுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகின்றது.