அமெரிக்க திறைசேரி, இராஜாங்க திணைக்களத்தின் உயர்மட்ட குழு ஜனாதிபதியை சந்திப்பு

அமெரிக்க உயர்மட்ட குழு ஜனாதிபதியை சந்திப்பு: இலங்கைக்கு  வருகை தந்துள்ள அமெரிக்க திறைசேரி மற்றும் இராஜாங்க திணைக்களத்தின் உயர்மட்ட குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த உயர்மட்ட தூதுக்குழுவில், ஆசியாவிற்கான பிரதி நிதி உதவி செயலாளர் ரொபேர்ட் கப்ரோத் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிரதி உதவி இராஜாங்க செயலாளர் தூதுவர் கெல்லி கெய்டர்லிங் ஆகியோர் அடங்குவர்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து தூதுக்குழுவினர் கலந்துரையாடியதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஒரு சவாலான காலத்தை கடந்து வருவதாகவும், வளமான, பாதுகாப்பான மற்றும் ஜனநாயக எதிர்காலத்தை அடைவதற்கு உதவ அமெரிக்கா தொடர்ந்து உதவி மற்றும் நீண்ட கால பங்காளித்துவத்தை வழங்கும் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

Tamil News