மூன்று  மாதங்களில் இலங்கையில் இருந்து  92  தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

92  தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் இன்று வரை 26 குடும்பங்களைச் சேர்ந்த 92 ஈழத் தமிழர்கள் தமிழகத்திற்கு தஞ்சம் கோரி வருகை தந்துள்ளனர்.

இலங்கையில் நீடித்து வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உணவுப் பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால்  மக்கள் பலர் தாய்நாட்டில் வாழ வழியின்றி இரு நாட்டு கடல் பாதுகாப்பையும் மீறி கடந்த   தமிழகத்தில் தஞ்சம் கோரி வருகின்றனர்.

இந்நிலையில், இவ்வாறு வரும் இலங்கையர்களை அகதியாக பதிவு செய்ய அனுமதிக்குமாறு தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அடைக்கலம் தேடி தமிழ்நாடு வரும் இலங்கையர்களை சட்டவிரோதமாக ஊடுருவியவர்களாகக் கருதாமல் முகாம்களில் வைத்திருக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து தஞ்சம் கோரி வருபவர்களை அகதிகளாக பதிவு செய்யாமல் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tamil News