தமிழகம்: இலங்கையைச் சேர்ந்த இருவர் மயக்கமுற்ற நிலையில் தனுஷ்கோடி கடற் கரையில் மீட்பு

479 Views

தமிழகத்தின் தனுஷ்கோடி பகுதியில் வயதான தம்பதியர் மயங்கிய நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த தம்பதியினர்  திருகோணமலையில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தம்பதியை மீட்டு  இராமேஸ்வரம் அரச மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து இராமேஸ்வரம்  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் இதுவரை 85க்கும் மேற்பட்டோர்  கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil News

Leave a Reply