இலங்கை ஏற்றுமதி பொருட்களின் விற்பனைக்கு உதவ சீனா இணக்கம்

சீனாவில் விற்பனை காட்சியகங்களை நிறுவி இலங்கை ஏற்றுமதி பொருட்களின் விற்பனை செய்வதற்கு  இலங்கைக்கு உதவ சீனா முன்வந்துள்ளது.

சீனாவின் யுவான், சிச்சுவான்,பெய்ஜிங் ஆகிய இந்த மாகாணங்களிள் இலங்கை ஏற்றுமதி பொருட்களுக்கான காட்சியகங்களை நிறுவ அதிகாரிகள் பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதுவர்  பாலித கொஹோனாவிடம் உறுதியளித்துள்ளனர் .

இந்த விற்பனை காட்சியகங்களை நடத்துவதற்கான செலவை சீனாவின் அந்தந்த மாகாணங்கள் ஏற்கும். இலங்கை தனது தயாரிப்புகளுக்கான சீன சந்தையை அணுகுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என கொஹொன தெரிவித்துள்ளார்.
Tamil News