இலங்கைக்கு அமெரிக்கா உதவும்-பிரதமர் ரணிலிடம் சமந்தா பவர் தெரிவிப்பு

131 Views

இலங்கைக்கு அமெரிக்கா உதவும்

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரமைப்பின் நிர்வாகி (US Agency for International Development, USAID)  சமந்தா பவர் (Samantha Power) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

தொலைபேசிமூலம் இடம்பெற்ற இந்த உரையாடலின்போது,  இந்தமாதம் இடம்பெற்ற அரசியல் அமைதியின்மையின்போது கொல்லப்பட்ட காயமடைந்த இலங்கையர்கள் குறித்து சமந்தா பவர் அனுதாபத்தை வெளியிட்டார் என அந் முகவரமைப்பின் பேச்சாளர் ரெபேக்கா சலிவ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களிற்கான ஆதரவை வெளியிட்ட அவர், இலங்கை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு தமது முகவரமைப்பு உதவும் என தெரிவித்துள்ளார். இலங்கை மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு பொருளாதார அரசியல் சீர்திருத்தங்களை விரைவாக முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய புறக்கணிக்கப்பட்ட சமூகங்கள் பொருளாதார அதிர்ச்சிகளை அனுபவிக்கும் அவர்களின் அவசரதேவைகளை நிவர்த்திசெய்வதற்கு இலங்கையில் அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரமைப்பு தனது திட்டங்களை முன்னிறுத்துகின்றது என சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவின் தூண்டுதலற்ற உக்ரைன் மீதான யுத்தம் காரணமாக அதிகரிக்கும் எண்ணெய் உணவுப்பொருட்களின் விலைகளும் இந்த நிலையை தீவிரப்படுத்தியுள்ளன என்றும்  சர்வதேச நாணயநிதியம் போன்ற இலங்கைக்கு உதவும் சமூகத்துடன் அமெரிக்கா நெருக்கமாக இணைந்து பணியாற்றும் எனவும் சமந்தா பவர் பிரதமரிடம் உறுதியளித்துள்ளார்.

Tamil News

Leave a Reply