மட்டக்களப்பு: எரிபொருள் தட்டுப்பாடு- மக்கள் பெரும் பாதிப்பு

கடமைகளை நிறைவேற்றுவதில் பெரும் நெருக்கடி

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்ணெண்ணை இல்லாமை மற்றும் எரிவாயு இல்லாத காரணத்தினால் மக்கள் தினமும் தமது அன்றாட கடமைகளை நிறைவேற்றுவதில் பெரும் நெருக்கடி நிலைகளை எதிர்நோக்குகின்றனர்.

மட்டக்களப்பு நகர் உட்பட பல பகுதிகளில் எரிவாயு அடுப்புகள் மற்றும் மண்ணெண்ணை அடுப்புகளே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் எரிவாயு மற்றும் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்வதில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக பெரும்  நெருக்கடிகளை மக்கள் எதிர்நோக்கிவருகின்றனர்.

விறகு அடுப்புகளை பயன்படுத்த முடியாத நிலையில் மட்டக்களப்பின் பல பகுதிகளின் நிலைமைகள் உள்ளதன் காரணத்தினால் எரிவாயு மற்றும் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் தினமும் வீதியில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

ஒரு கிலோமீற்றருக்கும் அதிகமான நீண்ட வரிசையில் நின்று இன்று மண்ணெண்ணையினை மக்கள் பெறும் நிலைமையேற்பட்டதுடன் குறிப்பிட்ட நேரத்துடன் மண்ணெண்ணை வழங்கப்பட்டு முடிந்த நிலையில் பெருமளவானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலையினையும் ஏற்பட்டுள்ளது.

சில குடும்பங்கள், சில நாட்களாக கடைகளிலேயே உணவுகளைப் பெற்று வருவதாகவும் தற்போது உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதனால் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tamil News

Leave a Reply