வளைகுடாவில் ஈரான் சரக்குக் கப்பலை கைப்பற்ரிய அமெரிக்கா!

கடற்படை முற்றுகையின் ஒருபகுதியாக வளைகுடாவில் ஈரானிய கொடி பொருத்தப்பட்ட சரக்குக் கப்பலை அமெரிக்கா இடைமறித்து கைப்பற்றியுள்ளது.

தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்ட டிரம்ப், கப்பலை நிறுத்துமாறு விடுத்த எச்சரிக்கையை கேட்காததால், அமெரிக்க கடற்படை டௌஸ்கா எனும் கப்பலை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளார்.

இது போர்நிறுத்த மீறல் என்றும், இந்த ‘ஆயுதமேந்திய கடற்கொள்ளைச் செயலுக்கு’ விரைவில் பதிலடி கொடுப்போம் என்றும் ஈரான் கூறியுள்ளது.