இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக அமெரிக்கா தகவல்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உப செயலாளர் விக்டோரியா நூலண்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்கா சென்றுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“அமெரிக்கா இலங்கைக்கு அதன் பொருளாதார நெருக்கடியில், தொடர்ந்து ஆதரவளிக்கும், மேலும் சுதந்திரமான மற்றும் வளமான நாட்டை உருவாக்க நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்று நூலண்ட் ட்வீட் செய்துள்ளார்.