அமெரிக்க ஃபெடரல் கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் லாரா டிபெல்லா மற்றும் ஆணையாளர் ரொபர்ட் ஜே. ஹார்வி ஆகியோர் செப்டம்பர் 6 முதல் 10 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்து ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இவ்விஜயத்தின் போது, அவர்கள் இலங்கையின் உயர்மட்டத் தலைவர்களைச் சந்திப்பதுடன் 8ஆவது கொழும்பு சர்வதேச கடல்சார் மற்றும் தளவாடங்கள் மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளனர்.
இந்த விஜயம் இரு நாடுகளின் வர்த்தக உறவுகளை ஆழப்படுத்தி, பிராந்திய மையமாக இலங்கையின் நிலையை மேலும் வலுப்படுத்தும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் எரிக் மேயர் குறிப்பிட்டுள்ளார்.



