உலை எண்ணெய், நெப்தா விலைகள் நாளை முதல் குறைப்பு – இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்!

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்  உலை எண்ணெய் மற்றும் நெப்தா ஆகியவற்றின் விலைகளை  சனிக்கிழமை (05) முதல் அமலுக்கு வரும் வகையில் குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின்  பணிப்பாளர் மயூர நெத்திகுமார இது குறித்து தெரிவிக்கையில்,

ஒரு லீட்டர் உலை எண்ணெய்யின் விலை 38 ரூபாவினாலும், ஒரு லீட்டர் நெப்தாவின் விலை 35 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளன.

இதன்படி, 248 ரூபாவாக நிலவிய ஒரு லீட்டர் உலை எண்ணெய்யின் விலை 210 ரூபாவாகக் குறையும்.

இதேவேளை, இந்த விலை குறைப்பின் பயனை மக்களுக்கு நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் போது மக்களுக்கு இதற்கான நிவாரணம் பிரதிபலிக்கும் என்றார்.