அமெரிக்கா, சீனா இணைந்து இலங்கைக்கு உதவி

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருகடிக்கு, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளன.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு தூதுவர்களுக்கும் இடையில் இன்று முற்பகல் நட்பு ரீதியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பில் சீன தூதரகம் ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக இதனைக் குறிப்பிட்டுள்ளது.

Tamil News