சீனாவிலிருந்து சீருடை, பாடப்புத்தகங்கள் அச்சிட இந்தியாவிலிருந்து நிதி : இலங்கை கல்வியமைச்சு தகவல்

பாடப்புத்தகங்கள் அச்சிட இந்தியாவிலிருந்து நிதி

“பாடசாலை உணவுக்காக ஒதுக்கப்படும் கொடுப்பனவை இரட்டிப்பாக்குமாறு அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் அடுத்த வருடத்துக்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான காகிதங்களைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த மதிப்பீடுகள் திறைசேரிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

மேலும், அடுத்த வருடத்துக்குத் தேவையான 50% பாடசாலைச் சீருடைகளை வழங்க சீனா ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், மீதமுள்ள சீருடை ஒதுக்கீட்டுக்காக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tamil News